கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று (ஜூன் 28) தளா்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்தது.
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் ஆறு விமானங்கள் ரத்து! - Chennai airport
சென்னை: விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் ஜூன் 19ஆம் தேதி முழு ஊரடங்கு தொடங்கும் முன்பு வரை 66 விமானங்கள் இயக்கப்பட்டு, ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் பயணித்தனா். ஆனால், தற்போது 54 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் சுமாா் இரண்டாயிரத்து 900 பயணிகள் மட்டுமே பயணிக்க முன்பதிவு செய்தனா்.
சேலம், மைசூருக்கு 6 பேர், கொல்கத்தாவுக்கு 8 பேர், திருவனந்தபுரத்துக்கு 6 பேர், திருச்சிக்கு 16 பேர், கோவைக்கு 17 பேர், பெங்களூருவுக்கு 20 பேர், தூத்துக்குடிக்கு 22 பேர், மதுரைக்கு 24 பேர், அந்தமானுக்கு 28 பேர் மட்டுமே முன்பதிவு செய்தனா். அவா்களிலும் சிலா் இ-பாஸ் கிடைக்காமல் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்துசெய்தனர். மேலும், போதிய பயணிகள் இல்லாததால் கடப்பா, விஜயவாடா, ராஜமுந்திரி, வாரணாசி, புவனேஸ்வா், குவஹாகாத்தி ஆகிய ஆறு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.