தமிழ்நாட்டில் வெற்றிடமாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மே 24ஆம் தேதி தொடங்கி நேற்று பிற்பகல் மே 31ஆம் தேதி 3 மணியுடன் நிறைவுபெற்றது.
இதில் திமுக சார்பாக தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோரும், காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர். இதேபோல அதிமுக சார்பாக சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும், சுயேச்சைகள் 7 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 7 பேரும் என மொத்தம் 13 பேர் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனுக்கள் மீதான ஆய்வானது, தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. ஆய்வுக்குப் பின் கீழ்க்கண்ட 6 வேட்பாளர்கள் அளித்த 11 வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை என தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் அறிவித்தார். அதன்படி
1. சு. கல்யாணசுந்தரம், திமுக
2. இரா. கிரிராஜன், திமுக
3. சி.வி. சண்முகம், அஇஅதிமுக