1.நீட் தேர்வு விலக்கு: ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி!
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, திமுக மக்களவை உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி நேரில் சந்தித்துபேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினின் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசால் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை நவீன் பட்நாயக்கிடம் வழங்கினார்.
2.24 மணி நேரத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (அக். 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் ஒரே நாளில் 200 டன் பூக்கள் விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் பண்டிகையை முன்னிட்டு இன்று(அக்.13) ஒரே நாளில் 200 டன் மலர்கள் விற்பனையானதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
4.நீட் விலக்கு விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 13) ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
5.உயிருக்கு ஆபத்தான நிலையில் காதல் மனைவி - மீட்டுத் தரக்கோரி எஸ்.பி.-யிடம் புகாரளித்த கணவன்
ஈரோட்டில் கணவன் கண் முன்னே காதல் மனைவியை இழுத்துச் சென்ற அவரது பெற்றோர் குறித்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் மனைவியை மீட்டுத் தரக்கோரியும் காதல் கணவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.