சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 15 ஆயிரத்து 742 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பங்களாதேஷ் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த தலா ஒரு நபர்கள் உட்பட புதிதாக 589 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரத்து 614 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் 34 லட்சத்து 59 ஆயிரத்து 589 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் இரண்டாயிரத்து 694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் 208 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 18 ஆயிரத்து 866 என உயர்ந்துள்ளது.