தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டுக்கு இதுவரை ரூ.5,569.70 கோடி கடன்! - மத்திய நிதி அமைச்சகம்

தமிழ்நாட்டுக்கு ரூ.9,627 கோடி கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டு, ரூ.5,569.70 கோடி இது வரை கடனாக சிறப்பு சாளரத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

ministry
ministry

By

Published : Feb 13, 2021, 12:08 PM IST

மத்திய நிதி அமைச்சகம், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்காக 15 ஆவது தவணையாக ரூ.6,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது. இதில் ரூ.5,516.60 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூ.483.40 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (டெல்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிமுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் எந்த விதமான வருவாய் பாதிப்பும் ஏற்படவில்லை. சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் மத்திய அரசு இந்தக் கடனை திரட்டுகிறது.

இதுவரை, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் ரூ.90,000 கோடி கடன்களுக்கு நிதி அமைச்சகம் வழி வகுத்துள்ளது. இது தவிர, மொத்த மாநில உற்பத்தியில் 0.50% அளவுக்கு கூடுதல் கடனாக பெற்றுக்கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.9,627 கோடி கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டு, ரூ.5,569.70 கோடி இது வரை கடனாக சிறப்பு சாளரத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய அரசு, சத்திஸ்கர் அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை $100 மில்லியன் மதிப்பிலான திட்டத்தில் இன்று கையெழுத்திட்டன. சத்திஸ்கரில் பழங்குடியினர் அதிகமுள்ள பகுதிகளில் ஊட்டச்சத்து சார்ந்த வேளாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள இத்திட்டம் ஆதரவளிக்கும். சுமார் 1,000 கிராமங்களில் உள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

இதையும் படிங்க: 500 பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை - தனியார் மருத்துவமனை அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details