சென்னை:மாமல்லபுரத்தில் நாளை முதல் ஆக.10 ஆம் தேதி வரை நடக்க உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் போட்டியில் பங்கேற்க 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 774 வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.
சென்னை வரும் வெளிநாட்டு வீரர்களை தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வரவேற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தங்கும் விடுதிகளுக்கு அழைத்து செல்கின்றனர்.
சென்னை வந்தடைந்த 553 வீரர்கள் அதன்படி, 5 ஆவது நாளாக இன்று (ஜூலை 27) அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஒமென், சவூதி அரேபியா, நார்வே, ஆஸ்திரேலியா, போலாந்து, ஈரான், சுவீடன், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க், சில்லி, ரஷியா, உக்ரைன் உள்பட 45 நாடுகளில் இருந்து 553 வீரர்கள் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்தடைந்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் உள்ள ஒலிம்பியாட் சின்னத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இன்று ஒரே நாளில் 1,020 வீரர்கள் சென்னை வருகின்றனர்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: நேரு உள்விளையாட்டு அரங்கில் மு.க.ஸ்டாலின் ஆய்வு