சென்னை புறநகர் மின்சார ரயில்களில் அண்மையில் அனைத்து தரப்பினரும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 410 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் 90 கூடுதல் புறநகர் ரயில் சேவைகளை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
மொத்தமாக 500 ரயில்கள் திங்கள்கிழமை (டிச.28) முதல் சனிக்கிழமை (ஜன 2) வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் ரயில் சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.