சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தெலுங்கு-கங்கா திட்ட ஒப்பந்தத்தின்படி ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த ஆண்டு தரப்பட வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் தமிழ்நாடு பொதுப்பணித் துறை அலுவலர்கள், ஆந்திர பொதுப்பணித் துறைக்கு கடிதம் எழுதியதையடுத்து, நேற்று (ஜூன் 14) கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டலேறு அணையிலிருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு - Tamilnadu border
சென்னை: சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 14-ஆம் தேதி தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிற
மேலும், ஜூன் 16ஆம் தேதி தமிழ்நாடு எல்லையான ஜீரோ பாயிண்ட் வந்தடையும் என்றும், அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.