சென்னை:பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆகியவற்றைக் கண்டித்து 2ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்டோர் சென்னை குறளகம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச பொருளாளர் நடராஜன், 'பொதுமக்களையும், தொழிலாளர்களையும் பாதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தொடர்ந்து போராட்டம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்' என்றார்.
’பொதுமக்கள் நலனைக்கருத்தில் கொண்டு இன்று தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். 55 விழுக்காடுக்கும் மேல் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது’ எனவும் கூறினார்.
'மத்திய தொழிற்சங்கத்தை அழைத்து மத்திய அரசு பேச வேண்டும். மேலும் 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக மத்திய அரசுக்கும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டு இருக்கும்' எனவும் அவர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க:'6 மணி நேரம் இங்குதான் இருப்பேன், முடிந்தால் கைது செய்யுங்கள்'- அண்ணாமலை சவால்