சென்னை: இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த விஜயகோபால் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், "பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவின்படி, பேரிடரால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்கவேண்டும் என்றும், அது குறித்து மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும், ஒரு வாரம் சிகிச்சை பெற்றவர்களுக்கு 4 ஆயிரத்து 300 ரூபாயும், ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெறக் கூடியவர்களுக்கு 12 ஆயிரத்து 700 ரூபாய் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் 2016ஆம் விதிமுறைகள் உள்ளது.
இழப்பீட்டு தொகையை அதிகரிக்க முடியுமா?
உச்ச நீதிமன்றத்தில் கரோனா தொடர்பான பொதுநல வழக்கு விசாரணையின்போது, கரோனா உயிரிழப்புகளுக்கும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது" என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், " தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்த 36 ஆயிரத்து 200 பேரின் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 50 ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக நிவாரணம் வழங்குவது குறித்த கருத்தை பெற்று தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? - நீதிபதிகள் காட்டம்