தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 5 PM - 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 5, 2021, 4:57 PM IST

1.அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவு!

வயது முதிர்வு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகக் கடந்த மாதம் முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று மாலை 3:42 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 80.

2.'மக்களை தேடி மருத்துவம்' - பயனாளிகளின் இல்லம் தேடிச் சென்ற ஸ்டாலின்!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் ஸ்டாலின் பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று மருந்துகளை வழங்கி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

3.பாலியல் சீண்டல்.. இளைஞருக்கு பாடம் புகட்டிய அஸ்ஸாம் ஜான்சி ராணி!

பாலியல் ரீதியாக சீண்டிய இளைஞருக்கு, அஸ்ஸாம் இளம்பெண் ஒருவர், தக்க பாடம் புகட்டியுள்ளார்.

4.டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - தகுதியானவர்களை பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைக்க உத்தரவு

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதிற்குத் தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை, வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

5.தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட்!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

6.48 மணி நேரத்தில் நடிகர் தனுஷ் 50% வரியைக் கட்டவேண்டும் - உயர் நீதிமன்றம் அதிரடி
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி நிலுவைத் தொகையான 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை அடுத்த 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

7.'சாதி ஒழிப்பு வரவேற்கத்தக்கதே: ஆனால், அறிஞர்களின் அடையாளத்தை சிதைக்காதீர்'

சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் கூட, இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

8.நயன்தாராவின் நெற்றிக்கண் டைட்டில் டிராக் வெளியீடு

நடிகை நயன்தாரா நடித்துள்ள, 'நெற்றிக்கண்' படத்தின் டைட்டில் டிராக் வெளியாகியுள்ளது.

9.தாய்- மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்!

தாய்- மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த பாஜக பிரமுகர், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

10.தேவாலய இடத்தில் பிள்ளையார் சிலை... இரு தரப்பினருடைய ஏற்பட்ட மோதலால் பரபரப்பு!

நாமக்கல் அருகே கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான இடத்தில், இந்து அமைப்பினர் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டதால், இரு தரப்பினருடைய மோதல் ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details