தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கான ஒப்புதலை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கவில்லை.
உள்ஒதுக்கீடு: ஆளுநருடன் மூத்த அமைச்சர்கள் 5 பேர் சந்திப்பு! - அமைச்சர் கே.பி. அன்பழகன்
Banwarilal Purohit
12:43 October 20
அதன் காரணமாக அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:7.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: ஆளுநருக்கு கடிதம் எழுதிய வைகோ
Last Updated : Oct 20, 2020, 1:41 PM IST