சென்னை:கீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் இன்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல்கொடுத்தனர்.
அதனடிப்படையில், அங்கு விரைந்த தீயணைப்புதுறையினர் படுகாயங்களுடன் 5 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.