கர்நாடக மாநிலம், பெங்களூரூவிலிருந்து சென்னைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்கள் கண்டெய்னர் லாரி மூலம் கடத்திவருவதாக மயிலாப்பூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மயிலாப்பூர் தனிப்படை காவல்துறையினரின் தீவிர விசாரணையில், திருவள்ளூர் நயபாக்கம் வழியாக சென்னைக்கு குட்கா கடத்தி வருவதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் அங்கு வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 5.5 டன் குட்கா கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்தது.