நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
சென்னையில் நேற்று (ஏப்ரல் 25) மட்டும் 43 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 495ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் மட்டும் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் 495 பேருக்கு கரோனா - மாநகராட்சி அறிவிப்பு - 495 people affected by corona in chennai
சென்னை: திரு.வி.க., நகரில் இன்று ஒரே நாளில் மட்டும் 25 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
chennai corporation
அதன் விவரம் பின்வருமாறு:
- தண்டையார்பேட்டை - 64 பேர்
- ராயபுரம் - 137 பேர்
- திரு.வி.க. நகர் - 80 பேர்
- தேனாம்பேட்டை - 54 பேர்
- திருவொற்றியூர் - 14 பேர்
- அடையார் - 10 பேர்
- பெருங்குடி - 8 பேர்
- ஆலந்தூர் - 9 பேர்
- வளசரவாக்கம் - 14 பேர்
- சோழிங்கநல்லூர் - 2 பேர்
- அண்ணாநகர் - 43 பேர்
- கோடம்பாக்கம் - 53 பேர்
- மணலி - ஒருவர்
- மாதவரம் - 3 பேர்
- அம்பத்தூர் - 2 பேர்
சென்னையில் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 332 பேரில், 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.