தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் 780 சங்கங்களில் ரூ.482 கோடி முறைகேடு - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்! - கூட்டுறவுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம்

பத்தாண்டு அதிமுக ஆட்சியில் 780 சங்கங்களில் 482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

By

Published : Apr 8, 2022, 5:45 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.8) கூட்டுறவுத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜூ, 'நகைக்கடன் 48 லட்சத்து 84 ஆயிரத்து 786 பேருக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 35 லட்சத்து 37 ஆயிரத்து 653 பேர் தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 12 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக' கூறினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 'தமிழ்நாட்டில் உள்ள 4,451 கூட்டுறவு சங்கங்களில் 780 சங்கங்களில் 482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

மேலும், கூட்டுறவு சங்கங்களில் 4 ஆயிரத்து 816 கோடி ரூபாய்க்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, நிபந்தனைகளின்றி கூட்டுறவு வங்கிக் கடனை ரத்து செய்க' - விவசாயிகள் நூதனப் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details