சென்னை: பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சவூதி அரேபியா ரியாத் நகரில் இருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர்.
தங்கத்தில் ஸ்பேனர்கள்:அப்போது ஆந்திர மாநிலம், போஜவரிபள்ளியை சேர்ந்த மெகபூப் பாஷா(32) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் 6 ஸ்பேனர் கருவிகள் இருந்தன. இவற்றின் மீது சந்தேகம் கொண்டு பரிசோதித்து பார்த்தபோது தங்கத்தால் செய்யப்பட்டு வெள்ளை நிற முலாம் பூசப்பட்டு கடத்தி வந்திருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.
சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்க ஸ்பேனர்கள் - இளைஞர் கைது - சென்னை:
சவூதியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.47 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்க ஸ்பேனர்கள் கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னைக்கு கடத்தப்பட்ட 47 லட்சம் மதிப்புள்ள தங்க ஸ்பேனர்கள்- வாலிபர் கைது
இவரிடம் இருந்து ரூ. 47 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 20 கிராம் தங்க ஸ்பேனர்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திர இளைஞர் மெகபூப் பாஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கஞ்சா கடத்தல் கும்பலுடன் பிரியாணி - காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர்