துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்த மீட்பு விமான பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த கலீல் ரகுமான்(49) என்பவர் ஆடைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.7.84 லட்சம் மதிப்பிலான 154 கிராம் எடையுடைய தங்க பேஸ்ட்டை பறிமுதல் செய்தனா்.
ஆடைக்குள் 154 கிராம்.. சீட்டுக்கடியில் 309 கிராம்.. தங்கம் கடத்தல் குறித்து சுங்கத்துறை விசாரணை
சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ. 23.6 லட்சம் மதிப்புடைய 463 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
463 g gold seized at Chennai airport smuggling from dubai
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அந்த விமானத்தை ஊழியா்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது சீட்டிற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சலில் ரூ.15.72 லட்சம் மதிப்பிலான 309 கிராம் தங்கக்கட்டிகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து அதை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் தங்கத்தை மறைத்து வைத்துச் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.