சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டுகள் மறுவரை செய்யப்பட்டு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 24 மணி நேரமும் கண்காணிக்க 45 பறக்கும் படை மற்றும் 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களைச் சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.