தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய 45 நிறுவனங்கள் விருப்பம்! - tn govt news

ஆக்சிஜன், தடுப்பூசிகள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய 45 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

45 companies shows interest to manufacture medical equipments in tamilnadu
45 companies shows interest to manufacture medical equipments in tamilnadu

By

Published : Jun 2, 2021, 9:31 PM IST

சென்னை: தமிழ்நாட்டிலேயே கரோனா தொற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளைத் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில், கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கக்கூடிய வகையில் நிரந்தரத் தீர்வாக, மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள், கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் உற்பத்தி ஆகியவற்றையும் நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்குவதற்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ (TIDCO), அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்ய விருப்பமுள்ள நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில், ஆலைகளை நிறுவுவதற்கான விருப்ப மனுக்களை கோரியிருக்கிறது.

அதில், தற்போது வரை 45 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு ஆக்சிஜன், தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகள் தேவைக்கான உற்பத்தி உள்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details