தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 447 பேருக்கு கரோனா! - கரோனா பாதிப்பு விபரம்

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்நாடு திரும்பிய 22 பேருக்கும், கத்தார் நாட்டிலிருந்து திருநெல்வேலி திரும்பிய இரண்டு பேருக்கும் என இன்று 447 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

447 new corona positive cases reported in Tamilnadu
447 new corona positive cases reported in Tamilnadu

By

Published : May 14, 2020, 10:19 PM IST

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 91 ஆயிரத்து 432 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களில் 2 லட்சத்து 81 ஆயிரத்து ஒருவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 757 பேருக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 9 ஆயிரத்து 646 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 2,240 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 365 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 43 வயது ஆண், 45 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

  • சென்னை : 5,637
  • திருவள்ளூர் : 495
  • செங்கல்பட்டு : 430
  • கடலூர் : 413
  • அரியலூர் : 348
  • விழுப்புரம் : 306
  • காஞ்சிபுரம் : 164
  • கோயம்புத்தூர் : 146
  • பெரம்பலூர் : 137
  • திருவண்ணாமலை : 136
  • மதுரை : 132
  • திருநெல்வேலி : 114
  • திருப்பூர் : 112
  • திண்டுக்கல் : 112
  • நாமக்கல் : 76
  • தேனி : 72
  • ஈரோடு : 70
  • தஞ்சாவூர் : 70
  • ராணிப்பேட்டை : 67
  • திருச்சிராப்பள்ளி : 67
  • கள்ளக்குறிச்சி : 61
  • கரூர் : 55
  • தென்காசி : 54
  • நாகப்பட்டினம் : 47
  • விருதுநகர் : 44
  • தூத்துக்குடி : 38
  • சேலம் : 35
  • வேலூர் : 34
  • திருவாரூர் : 32
  • ராமநாதபுரம் : 31
  • கன்னியாகுமரி : 31
  • திருப்பத்தூர் : 28
  • கிருஷ்ணகிரி : 20
  • நீலகிரி : 13
  • சிவகங்கை : 13
  • புதுக்கோட்டை : 6
  • தருமபுரி : 5

இதில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 555 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 675 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்து 275 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளனர். அவர்களில் 918 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பதும், ஒன்பது பேருக்கு வைரஸ் தொற்று உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளின் தேர்வு மையங்கள் கணக்கெடுக்கும் பணி

ABOUT THE AUTHOR

...view details