தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 442 கரோனா பாதிப்புகள் - மக்கள் நல்வாழ்வு துறை

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 442 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

corona cases
கரோனா பாதிப்பு நிலவரம்

By

Published : Feb 23, 2021, 9:36 PM IST

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று (பிப்.23) தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக 51 ஆயிரத்து 150 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து 441 நபர்களுக்கும், இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவர் என 442 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை ஒரு கோடியே 69 லட்சத்து 7 ஆயிரத்து 144 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து 8 லட்சத்து 49 ஆயிரத்து 166 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், குணமடைந்த 453 நபர்கள் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 32 ஆயிரத்து 620 என உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 3, அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகளும் என 6 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 472 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 2,34,652

கோவை - 55,544

செங்கல்பட்டு - 52,543

திருவள்ளூர் - 44,088

சேலம் - 32,690

காஞ்சிபுரம் - 29,477

கடலூர் - 25,124

மதுரை - 21,206

வேலூர் - 20,949

திருவண்ணாமலை - 19,469

திருப்பூர் - 18, 271

தஞ்சாவூர் - 18,017

தேனி - 17,148

கன்னியாகுமரி - 17,056

விருதுநகர் - 16,645

தூத்துக்குடி - 16,341

ராணிப்பேட்டை - 16,210

திருநெல்வேலி - 15,710

விழுப்புரம் - 15,254

திருச்சிராப்பள்ளி - 14,938

ஈரோடு - 14,745

புதுக்கோட்டை - 11,638

நாமக்கல் - 11,785

திண்டுக்கல் - 11,425

திருவாரூர் - 11,332

கள்ளக்குறிச்சி - 10,905

தென்காசி - 8,516

நாகப்பட்டினம் - 8,577

நீலகிரி - 8,335

கிருஷ்ணகிரி - 8,144

திருப்பத்தூர் - 7,629

சிவகங்கை - 6,769

ராமநாதபுரம் - 6,464

தருமபுரி - 6,649

கரூர் - 5,491

அரியலூர் - 4,730

பெரம்பலூர் - 2,282

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 947

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1043

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்த 5 அமெரிக்கர்கள் - அஞ்சலி செலுத்திய பைடன்!

ABOUT THE AUTHOR

...view details