பெரம்பூர் ஜமாலியா சாந்தி காலனியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் அதே பகுதியில் இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சாகுல் தன் குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள வீட்டில் நகை, பணம் கொள்ளை... - காவல் நிலையம்
சென்னை: பெரம்பூர் காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் நேற்று வீடு திரும்பியபோது, தனது வீட்டின் பூட்டு உடைக்கப்படிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது மேல் தளத்திலிருந்த இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 40 சவரன் நகைகள், இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் சாகுல் ஹமீது அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். காவல் நிலையத்திற்கு பின்புறமே கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:முன்னாள் முதலமைச்சர் பி.டி. ராஜனின் 43ஆவது நினைவு நாள் இன்று!