சென்னை:இதுகுறித்து சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "தமிழ்நாடு அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படும். குறிப்பாக பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்படும்.
இதன் மூலம் அரசுத்துறைகளில் 100 விழுக்காடு மாநிலத்தவர் நியமனம் செய்யப்படுவார்கள். அத்துடன் வேலை வாய்ப்பில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது கரோனாவால் போட்டித்தேர்வுகள் தாமதமாகியுள்ளன.