சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர், பெரியார் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் செந்தில்குமார் (37).
இவரது 4 வயது குழந்தை ஹரிஹரன் நேற்று மாலை அவரது அத்தை உஷா என்பவருடன் கேகே நகர் அம்மன் கோவில் தெருவில் அவர் வேலை பார்த்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார்.
அங்கு உஷா தான் வேலை பார்த்து வரும் வீட்டு உரிமையாளர் ராமுவின் இரு குழந்தைகளுடன் ஹரிஹரன்அடுக்குமாடி குடியிருப்பில் பின்புறம் உள்ள நீச்சல் குளம் அருகே விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை ஹரிஹரன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார் இதனை கண்ட எதிர் வீட்டு நபர் கூச்சலிட்டதை அடுத்து அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஐந்தரை அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் குதித்து குழந்தை ஹரிஹரனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு குழந்தை ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பலி - chennai nesapakkam
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நீச்சல் குளத்தில் தவறி விழுந்து பலி
சென்னை அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பலி
இதையும் படிங்க: கேரளாவில் குழந்தைகளை பாதிக்கும் தக்காளி காய்ச்சல் அதிகரிப்பு