தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்கம்பி மீது பேருந்து உரசியதில் 4 பேர் உயிரிழந்த விவகாரம் - அறிக்கை கேட்கிறது மனித உரிமைகள் ஆணையம் - human rights commission

சென்னை: மின்கம்பி மீது பேருந்து உரசிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர், தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
மனித உரிமைகள் ஆணையம்

By

Published : Jan 13, 2021, 5:04 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து நேற்று (ஜனவரி 12) தஞ்சாவூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று, வரகூர் அருகே எதிரே வந்த லாரிக்கு வழி விட்டபோது, தாழ்வாக தொங்கிய மின்கம்பி மீது உரசி விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணித்த கல்யாணராமன், கவுசல்யா, கணேசன், நடராஜன் ஆகிய நான்கு பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன், இந்த விபத்து தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர், அதன் நிர்வாக இயக்குநர், தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details