தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னைக்கு வந்தடைந்த 4,80,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் - covishield vaccine from pune

புனேவிலிருந்து விமானம் மூலம் நான்கு லட்சத்து 80 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று (ஜூலை 23) சென்னை வந்தடைந்தன.

கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

By

Published : Jul 23, 2021, 6:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகத் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.

அதன்படி இன்று புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 12 பார்சல்களில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோவிஷீல்டுதடுப்பூசி மருந்துகள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டன.

அவை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் கொண்டுசெல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் 28 பார்சல்களில் மூன்று லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டுதடுப்பூசி மருந்துகள் கொண்டுவரப்பட்டன. அவை சென்னை பெரியமேட்டில் உள்ள மருந்துக் கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதையும் படிங்க:சென்னை வந்தடைந்த 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள்

ABOUT THE AUTHOR

...view details