4 லட்சத்து 78 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன - 4 lakh 78 thousand vaccines came to Chennai
சென்னை: புனேவில் இருந்து 4 லட்சத்து 78 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமான நிலையம் வந்தடைந்தன.
தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. கரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஆனால் தடுப்பூசிகள் இல்லாமல் பல இடங்களில் முகாமங்கள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் புனேவில் இருந்து விமானத்தில் 40 பெட்டிகளில் 4 லட்சத்து 78 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. இவை சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.