2020-21ஆம் ஆண்டு மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 3ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று (நவம்பர் 12) மாலை 5 மணி வரை மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க 38,232 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர 27 ஆயிரத்து 164 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில், 25,725 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். அவர்களில் 24,154 மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர்.