தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

381 எம்பிபிஎஸ் இடங்கள் இன்று நிரம்பின! - மருத்துவ படிப்பு

சென்னை: இன்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் 381 இடங்களை எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

counselling
counselling

By

Published : Nov 30, 2020, 7:49 PM IST

மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக இன்று நடைபெற்ற கலந்தாய்விற்கு 390 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அவர்களில் 8 மாணவர்கள் வராத நிலையில், 382 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். அதில் 381 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்துள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

இன்றைய கலந்தாய்வின் முடிவில், எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,059 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,060 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 151 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 985 இடங்களும் உள்ளன என மாணவர் சேர்க்கை குழுவின் செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:7.5% உள் இடஒதுக்கீடு, மருத்துவ படிப்பு கட்டணம் விவகாரம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details