தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 36 பேர் கைது - சென்னை எம்கேபி நகர் காவல் நிலையம்
சென்னையில் கடந்த 7 நாட்களில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
அதன் தொடர்ச்சியாக கடந்த ஏழு நாட்களில் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 177.7 கிலோ புகையிலை பொருட்கள், 973 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:தரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை தேவை...அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை...