தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கழிவறை கட்ட 36 கோடி ரூபாய் டெண்டர் - மேயர் பிரியா

சென்னையில் கழிவறை கட்டுவதற்கு 36 கோடி ரூபாய் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் டெண்டர் விடப்பட உள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கழிவறை கட்டுவதற்கான 36 கோடி ரூபாயில் டெண்டர் விடப்படுள்ளது - ஆணையர் அறிவிப்பு
சென்னையில் கழிவறை கட்டுவதற்கான 36 கோடி ரூபாயில் டெண்டர் விடப்படுள்ளது - ஆணையர் அறிவிப்பு

By

Published : May 20, 2022, 9:00 AM IST

சென்னை: மாமன்ற மகளிர் வார்டு உறுப்பினர்களுக்கான நகர்புற சுகாதார மற்றும் பாலினம் குறித்த கருத்தரங்கு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மகளிர் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார உறுதுணை திட்டத்தின் வாயிலாக நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் பொதுக்கழிவறை பயன்பாடு, அதன் நிலை, தெருவிளக்குகள், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் ஆகியவற்றில் பெண்கள் பயன்படுத்துவது குறித்து பேசப்பட்டது.

நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "சுகாதாரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த கருத்தரங்கம் நடைபெருகிறது. சென்னை முழுவதும் பல இடங்களில் புதிய கழிவறைகள் கட்டப்பட உள்ளன. மாமன்ற உறுப்பினர்கள் அவரவர் வார்டில் பெண்களுக்கென தனி கழிவறை உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். கழிவறை கட்டுவதற்கான 36 கோடி ரூபாயில் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் டெண்டர் விடப்பட உள்ளது.

மண்டலம் 5, 6, 9 மற்றும் மெரினா கடற்கரையில் கழிவறை கட்டுவதற்கான முதற்கட்ட டெண்டர் விடப்பட உள்ளது. டெண்டர் எடுத்தவர்கள் அந்த கழிவறைகளை சரியாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். மேலும் டெண்டர் விட்டு அதை கட்டுவதற்கு பல நாட்கள் எடுத்துக்கொள்ளும் அதுவரை, அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் இருக்கும் கழிவறைகளை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மாமன்ற உறுப்பினர்கள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பல பகுதிகளில் தெரு விளக்கு எரியாமல் இருக்கிறது. இதை அனைத்தும் சரி செய்ய வேண்டும். சுரங்கங்கள், சாலையை கடக்கும் பகுதிகள் முதலிய இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை மாமன்ற உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஏதேனும் பிரச்சனை அல்லது தேவை ஏற்பட்டால் அந்தப் பகுதிகளில் இருக்கும் அதிகாரியிடம் தெரிவித்தாலும் சரி செய்யப்படும். மாமன்ற உறுப்பினர்கள் அன்பாக கோரிக்கை வைத்தால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். பிறகு சுகாதாரம் குறித்து மேயர் பிரியா உறுதிமொழி வாசிக்க மாமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இதையும் படிங்க:குட்கா வழக்கில் கைதானவர்கள் பள்ளிகளில் கழிவறை கட்டித்தர வேண்டும் - நிபந்தனையுடன் ஜாமீன் கொடுத்த நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details