தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

35 மகளிர் காவல் நிலையம் மாற்றம் - சென்னை மாநகர காவல் ஆணையர்! - மகளிர் காவல் நிலையம் மாற்றம்

சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்கள் தற்போது வரை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன. தற்போது அந்த 35 காவல் நிலையங்களும் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Women station changes
Women station changes

By

Published : Dec 19, 2020, 10:41 PM IST

சென்னை:35 மகளிர் காவல் நிலையங்களும் அந்தந்த சரகத்திற்கு உட்பட்ட உதவி ஆணையர், துணை ஆணையரின் கீழ் செயல்பட சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு என ஒன்று தமிழ்நாடு காவல்துறையில் உருவாக்கப்பட்டது.

இதற்கென தனியாக ஒரு பெண் துணை ஆணையர் நியமிக்கப்பட்டு அவர் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்டார்.

இந்த துணை ஆணையரின் கீழ் தான் சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 35 மகளிர் காவல் நிலையம் இனிமேல் அந்த சரகத்திற்கு உட்பட்ட உதவி ஆணையர், துணை ஆணையரின் கீழ் செயல்பட வேண்டும் என சென்னை மாநகர ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details