தமிழ்நாடு

tamil nadu

மார்ச் இறுதிக்குள் 31 வாக்குபதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்குகள் தயார்: தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு!

By

Published : Jan 4, 2021, 5:45 PM IST

தமிழ்நாட்டில் வரும் மார்ச் மாத இறுதிக்குள், 31 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்குகள் தயாராகி விடும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சா
தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சா

சென்னை: வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள், தமிழ்நாட்டில் 31 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்குகள் தயாராகிவிடும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தலைமை தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 120 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கும் கிடங்குகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மின்னணு இயந்திரம் வாக்குப்பதிவு கிடங்கு அமைக்க 6 கோடியே 19 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் 7.16 கோடி செலவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரஙகள் வைக்க கிடங்குகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 15ஆம் தேதிக்குள், ஐந்து கிடங்குகளும், 31ஆம் தேதிக்குள் 14 கிடங்குகளும் தயாராகிவிடும். வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் மொத்தமாக 31 மின்னணு இயந்திரம் சேமிப்பு கிடங்குகள் தயாராகிவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவெடுக்கவில்லை - சத்யபிரதா சாகு

ABOUT THE AUTHOR

...view details