தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஞாயிறு முழு ஊரடங்கு: சென்னை பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் காவலர்கள்! - 16 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயார்

security duty: சென்னையில் 31 மணி நேர முழு ஊரடங்கைத் தொடர்ந்து 16 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடப் போவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணி
ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணி

By

Published : Jan 8, 2022, 7:54 PM IST

security duty: கரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் வார நாள்களில் இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி நாளை (ஜனவரி 9) முழு ஊரடங்கு என்பதால் சென்னையில் 13 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடப்போவதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் 372 இடங்களில் வாகன சோதனைச்சாவடிகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே சுற்றுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல்செய்யப்படும் எனக் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதேபோன்று தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட இடங்களில் ஆயிரத்து 200 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடப் போவதாகவும், 34 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும் எனவும் தாம்பரம் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆவடி காவல் ஆணையரகத்துக்குள்பட்ட இடங்களில் ஆயிரத்து 750 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், 109 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும் என்றும் ஆவடி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இன்று (ஜனவரி 8) இரவு 10 மணிமுதல் வருகிற 10ஆம் தேதி காலை 5 மணி வரை எனத் தொடர்ச்சியாக 31 மணி நேர முழு ஊரடங்கு என்பதால் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதையும் படிங்க:Stalin Cycling: ஈசிஆரில் முதலமைச்சர் சைக்கிள் பயணம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details