தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கேரளாவில் 300 கிலோ ஹெராய்ன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்- 20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

கேரளாவில் ஹெராய்ன் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை உட்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட 300 கிலோ ஹெராய்ன் - 20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட 300 கிலோ ஹெராய்ன் - 20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

By

Published : Jul 20, 2022, 10:54 AM IST

Updated : Jul 20, 2022, 9:45 PM IST

சென்னை:கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்தாண்டு கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராய்ன் ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவை கடலோர பாதுகாப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

இதில் தொடர்புடைய சுரேஷ், சௌந்தர்ராஜன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் நடத்திய சோதனையில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சத்குணம் என்கிற சபேசன் என்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம் பறிமுதல் செய்யப்பட்டது.

20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

இதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் 9 இடங்கள் மற்றும் திருச்சியில் 11 இடங்களில் என்.ஐ.ஏ(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் இதுவரை 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், இரண்டு பென்டிரைவ் , ஒரு ஹார்ட் டிஸ்க் , இரண்டு லேப்டாப், 8 வைஃபை மோடம்கள், ஆவணங்கள், ஒரு இலங்கை பாஸ்போர்ட் மற்றும் சில தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனை - ஆயுதங்கள் பறிமுதல்!

Last Updated : Jul 20, 2022, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details