திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர், தும்பேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பெண்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இவர்கள், நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ராணி (56), ஜோதி (27) மற்றும் தும்பேரி பகுதியை சேர்ந்த தாயம்மாள் (38) ஆகியோர் ஆவார்கள். இவர்கள் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.