குன்றத்தூர் பகுதியில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காரில் வந்த கண்டிகையை சேர்ந்த சிராஜுதீன்(43), கூடுவாஞ்சேரியை சேர்ந்த மணிமாறன்(45), ஆகிய இருவரை கைது செய்து விசாரித்த போது, பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் அருகே உள்ள தனியார் குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் குடோனை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டை, மூட்டையாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா வாகனம் மூலம் குன்றத்தூர் எடுத்து வந்து காட்சிப்படுத்தினார்கள்.