தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

3PM
3PM

By

Published : Oct 3, 2021, 3:23 PM IST

1.நாட்டின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் - குலாம் நபி ஆசாத் புகழாரம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் போலவே அவரது மகன் ஸ்டாலின் இருப்பதாகவும், நாட்டின் சிறந்த முதலமைச்சராக அவர் திகழ்வதாகவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

2.பவானிபூர் இடைத்தேர்தல் - அசுர வேட்டையாடிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் மாநிலம் பவானிபூரில் நடந்த இடைத்தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றிபெற்றார்.

3.கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது!

மும்பை அருகே நடுக்கடலில் சுற்றுப்பயணம் சென்ற உல்லாச கப்பலில் பயணிகள் போல மாறுவேடத்தில் சென்று போதை தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்பட 13 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

4.'கரோனாவால் உயிரிழந்தோரில் 87% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்'

'தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் கரோனாவால் உயிரிழந்தோரில் 87 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். 45 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் நலம் பெற்றுள்ளனர்' எனத் தரவுகளுடன் சுட்டிக்காட்டும் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், பொதுமக்கள் தங்களது நலன்கருதி தடுப்பூசி செலுத்திக்கொள்ளமாறு அறிவுறுத்தியுள்ளார்.

5.ஜனநாயகக் கடமையாற்றிய பிரதமரின் தாய்!

குஜராத்தின் காந்திநகர் மாநகராட்சியின் 44 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் 99 வயதான தாய் ஹிராபா, ராய்சானில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

6.9ஆவது நாளாக 'T23' புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

கூடலூர் பகுதியில் உலவும் ’T23’ புலியைப் பிடிக்க மயக்க ஊசி, துப்பாக்கி ஆகியவற்றுடன் மருத்துவக் குழுவினரும் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்களும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

7.இந்தியாவில் மேலும் 22,842 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 842 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8.'கிராம சபைகளுக்கு மதுவிலக்கைத் தீர்மானிக்கும் அதிகாரம் வேண்டும்'

மது விலக்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசு கோரிக்கைவிடுத்துள்ளார்.

9.குடும்பத் தகராறு: 6 வயது சிறுவனை சுத்தியலால் தாக்கிக் கொன்ற உறவினர்

கேரளாவில் குடும்பத் தகராறில் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவனை அவரது உறவினர் சுத்தியலைக் கொண்டு தலையில் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான்.

10.ஊராட்சி நிதி கையாடல் விவகாரம்: தேர்தல் நடத்தும் அலுவலர் இடமாற்றம்!

திருநெல்வேலி: நிதி மோசடி விவகாரத்தில் ஊராட்சி செயலர் முன்னதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரை திடீர் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details