தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 3 PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்.

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 9, 2021, 3:44 PM IST

1.பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க தயார்- பாஜக!

நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாய சட்டங்கள் குறித்து பாஜக விவாதிக்க தயாராக இருக்கிறது என அக்கட்சியின் மாநிலங்களவை எம்பியும், ஜார்க்கண்ட் மாநிலத் தலைவருமான தீபக் பிரகாஷ் கூறினார்.

2.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: மனுதாரருக்கு 5 ஆண்டுகள் தடை

இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

4.தமிழர் மீது ரூ.2.63 லட்சம் கடன்

தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் தலையில் பொது சந்தா கடன் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் உள்ளது என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

5.அண்ணாத்த டப்பிங்கை முடித்த ரஜினி!

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

6.வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன் வாங்குவது சகஜம் - எடப்பாடி கே.பழனிசாமி..!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவே கடன் வாங்கப்படுவதாகவும், இது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் இருப்பதுதான் என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

7.விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி

பிரதமரின் உழவர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் (பிஎம் கிசான்) பயனடையும் உழவருக்கான அடுத்த தவணை நிதியை நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9) விடுவித்தார்.

8.அமைச்சர் பிடிஆர் பெயரில் போலி மின்னஞ்சல்: 7 பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அவதூறு பரப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

9.பட்டா கத்தி முனையில் 20 செல்போன்கள் திருட்டு

கேளம்பாக்கம் பஜாரில் பட்டா கத்தி முனையில் 20 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10.சிவகார்த்திகேயனின் ’டான்’ படக்குழு மீது வழக்குப்பதிவு

அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியதால் ’டான்’ படத்தின் படக்குழுவுக்கு வருவாய்த் துறையினர் அபராதம் விதித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details