சென்னை: ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கடந்த மாதம் பள்ளி பேருந்து மோதியதில், அதே பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவன் தீக்க்ஷித் உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள், அதிரடி விசாரணை மேற்கொண்டு, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே விபத்து நடந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.