சென்னை கொருக்குப்பேட்டை, திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(22). நேற்று இரவு, வீட்டருகே நடந்து சென்றுகொண்டிருந்த அவரை, மூன்று பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.
தீபாவளியன்று தகராறு: காத்திருந்து பழி தீர்த்த 3 பேர் கைது - Latest crime news
சென்னை: தீபாவளியன்று நடந்த தகராறு காரணமாக காத்திருந்து ஒருவரை வெட்டி பழிதீர்த்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
உடனே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். முதுகில் மூன்று தையல்கள் போடப்பட்டு சிகிக்சை பெற்று வரும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் ஆர்.கே. நகர் காவல்துறையினர், கொருக்குபேட்டை, அண்ணாநகரைச் சேர்ந்த ரஞ்சித்(18), குட்டி பாபு(18), சீனிவாசன்(18) ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தீபாவளியன்று இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே, ஒரு மாத காலமாக காத்திருந்து நோட்டமிட்டு பழிதீர்த்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.