சென்னைமாநகராட்சி மூன்று தலைமைப் பொறியாளர்களின் துறைகள் மாற்றியமைத்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாநகராட்சி தலைமைப் பொறியாளர்களில் ஒருவரான நந்தகுமார் சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால்கள், சிங்காரச் சென்னை 2.0, பேரிடர் மேலாண்மை போன்று அவர் வசம் இருந்த முக்கியத் துறைகள் தலைமைப் பொறியாளர் ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தியபோது நந்தகுமார் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.