தமிழகம் முழுவதும் இன்று முதல் இரண்டாம் தவணையாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தில், அம்மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், சுகாதாரத்துறை செயலாளர் முன்னிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "ஜனவரி 16ம் தேதி முதல் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அன்று தடுப்பூசி செலுத்திக் கொண்ட 3 ஆயிரம் பேருக்கு இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாள் முடிவடைந்தவர்கள் அனைவரும், 2ம் தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.