சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டுபிடிக்கும் வசதியாக ஆட்டமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்கனேஷன் கேமராஸ் (Automatic Number Plate Recognition cameras) எனப்படும் வாகன எண்களை கண்டறியும் தானியங்கி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்கள் மூலம் தற்போதுவரை போக்குவரத்து விதிகளை மீறியதற்காக சுமார் எட்டாயிரத்து 300 வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இரண்டே மாதங்களில் 28 லட்சம் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் - சாலை போக்குவரத்து விதிமுறை மீறல்
சென்னை: சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம்பிடிக்கும் தானியங்கி கேமரா மூலம் சுமார் 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா நகரில் கடந்த ஜூலை மாத இறுதியில் பொருத்தப்பட்ட இந்த தானியங்கி கண்காணிப்புக் கேமராக்கள், 24 மணி நேரமும் தானியங்கி முறையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை படம்பிடித்துவருகின்றன. அதிகபட்சமாக ஒரே நாளில் சென்னை அண்ணா நகரில் 63 ஆயிரம் போக்குவரத்து விதிமுறை மீறல்களை இந்தக் கேமராக்கள் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னையின் அண்ணா நகர் ரவுண்டானா, மதுரவாயல், திருமங்கலம் என முக்கியமான ஐந்து சந்திப்பு சமிக்ஞைகளில் (சிக்னல்) சுமார் 58 தானியங்கி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தானியங்கி முறையில் நடைபெற்றுவருகிறது.