சென்னை: தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜூலை 6) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலின்படி, தமிழ்நாட்டில் புதிதாக 30 ஆயிரத்து 499 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2 ஆயிரத்து 743 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 61 லட்சத்து 51 ஆயிரத்து 649 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 34 லட்சத்து 90 ஆயிரத்து 834 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,791 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 35 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 1,062 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 403 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 127 நபர்களுக்கும், திருவள்ளூரில் 169 நபர்களுக்கும், திருச்சியில் 113 நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மாநில அளவில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் 14.3 சதவீதம் பேருக்கும், செங்கல்பட்டில் 22 சதவீதம் பேருக்கும், சென்னையில் 14.8 சதவீதம் பேருக்கும், கோயம்புத்தூரில் 11 சதவீதம் பேருக்கும், திருநெல்வேலியில் 13.2 சதவீதம் பேருக்கும் என மாநில முழுவதும் நோய் தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது. அதேபோல் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள், மருத்துவமனையில் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் படுக்கைகளும் நிரம்பி வழிகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பொறியியல் செமஸ்டர் தேர்வுகளில் 38% பேர் மட்டுமே தேர்ச்சி - அண்ணா பல்கலை அதிர்ச்சி தகவல்!