சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில், 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி நிலையில், காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெற்றது. பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற்ற இத்தேர்வில், பகுதி ஒன்றில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 கேள்விகள் 150 மதிப்பெண்கள்.
பகுதி இரண்டில் பொது அறிவில் 75 கேள்விகளும்; மனக்கணக்கு மற்றும் திறன் அறிதல் பகுதியில் 25 கேள்விகளும் என 100 கேள்விகள் 150 மதிப்பெண்கள் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 316 வட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தேர்வினை 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்களும், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண் தேர்வுகளும், 131 திருநங்கைகளும், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 கைம்பெண், முன்னாள் ராணுவத்தினர் 6,635 பேர் எழுத பதிவு செய்தனர்.