தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 24 பேருக்கு கரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 24 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 256 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Apr 5, 2022, 11:09 PM IST

சென்னை:பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 19 ஆயிரத்து 146 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 24 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சையில் உள்ளவர்கள்:தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 45 லட்சத்து 36 ஆயிரத்து 968 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 34 லட்சத்து 52 ஆயிரத்து 955 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 256 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்றைய நோய் பாதிப்புகள்:மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 31 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 674 என உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 11 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 5 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 4 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் இரண்டு நபர்களுக்கும் சேலம் மாவட்டத்தில் ஒருவருக்கும் என இருபத்தி நான்கு நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்படவில்லை. 12 மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சை பெறவில்லை’ என அதில் கூறப்பட்டுள்ளது.


இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 21 பேருக்கு கரோனா பாதிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details