தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை 24 மணி நேரமும் இயங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டது. இதன்படி அனைத்து கடைகள், திரையரங்குகள், உணவகங்கள் ஆகியவற்றை 24 மணி நேரமும் திறக்கலாம். பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு மூன்று வருடத்துக்கு இந்த உத்தரவை பின்பற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கடைகள், திரையரங்குகள் இனிமே 24 மணிநேரம் திறந்து வைக்கலாம்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கடைகள், திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை இன்று முதல் 24 மணிநேரமும் திறந்து வைக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இன்று முதல் 24மணிநேரமும் கடை, திரையரங்கம், உணவகம் திறந்திருக்கும்!
இந்த அரசாணையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. சிறிய, பெரிய கடைகள் என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து கடைகள், திரையரங்குகள், உணவகங்கள் அனைத்தும் 24 மணி நேரத்துக்கு இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு காலை 6: 30 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், அலுவலகங்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம் என்ற நிபந்தனை உள்ளது குறிப்பிடத்தக்கது.