தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'போலீசாருக்கு கட்டிங்' - 24 மணி நேரமும் மது விற்பனை - Sale of liquor in Adambakkam

ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுபானக் கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் அதை காவல் துறையினர் கண்டு கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

'போலீசாருக்கு கட்டிங்' - 24 மணி நேரமும் மது விற்பனை
'போலீசாருக்கு கட்டிங்' - 24 மணி நேரமும் மது விற்பனை

By

Published : Jun 26, 2021, 7:40 PM IST

சென்னை: கரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதம்பாக்கம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட அனைத்து மதுப்பானக் கடைகள், பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் மது விற்பனை

குறிப்பாக மவுண்ட் ரயில் நிலையம் அருகில் உள்ள மதுபானக்கடை, சூப்பர் பார், திருமலா பார், கக்கன் நகரில் உள்ள மதுப்பானக்கடைளில் இரவு நேரங்களில் மது விற்பனை நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல் அறிந்து, அங்கு சென்று கண்காணித்தபோது எந்த அச்சமும் இன்றி மது விற்னை நடைபெற்று கொண்டிருந்தது. மதுபான கடை ஊழியரிடம் காவல் துறையின் கெடுபிடி குறித்து கேட்டபோது, "அதெல்லாம் பிரச்னை இல்லை. கட்டிங் ஒழுங்கா குடுத்தா போதும். அவர்களே பாதுகாப்பும் கொடுப்பார்கள்" என பதிலளித்தார்.

இந்த விற்பனையை காவல் துறையினர் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி

ABOUT THE AUTHOR

...view details